Our Feeds


Monday, September 21, 2020

www.shortnews.lk

கடலரிப்பினால் பாதிப்புற்ற மாளிகைக்காடு மையவாடியின் சுவரினை புனரமைப்பு செய்ய ஹரிஸ் எம்.பி நடவடிக்கை

 



சாய்ந்தமருது-மாளிகைக்காடு மையவாடியின் பின் சுவர் கடலரிப்பினால் பாதிப்படைந்து வருகின்ற சூழ்நிலை காணப்படுகின்றது. இதன்காரணமாக அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்கள் தோன்டப்படக்கூடிய வாய்ப்புள்ளது. 


இதுவிடயமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம். எம் ஹரீஸிடம் மாளிகைக்காடு வட்டார மத்திய குழு மற்றும் மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகமும் விடுத்த வேண்டுகோளுக்கினங்க வட்டார அமைப்பாளர் எம்.எச் நாஸரின் தலைமையில் இன்று(20) கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டனர்.


குறித்த இடத்தைப் பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் காரைதீவு பிரதேச செயலாளரோடு தொடர்புகொண்டு உடனடியாக அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்ததோடு மேலதிக நடவடிக்கைகளை கரையோரப் பாதுகாப்பு தினைக்களத்தோடு தொடர்புகொண்டு எடுப்பதாக கூறியுள்ளார். 


இந் நிகழ்வில் மாளிகைக்காடு நூர் ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினர், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர், மீனவர் சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


(சர்ஜுன் லாபீர்)






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »