வடமேல் மாகாணத்தில் சிங்கள மொழிப் பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகள் நீண்ட காற் சட்டை அணிந்து வர முடியாது என வடமேல் மாகாணக் கல்வித் திணைக்களம் சிங்களப் பாடசாலைகளுக்கு அனுப்பிய சுற்று நிரூபத்தை உடன் வாபஸ்பெறுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் பொதுச் செயலாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.
குறித்த விவகாரம் தொடர்பில் அப்துல் சத்தார் இவ்வாறு தெரிவித்தார்.
வடமேல் மாகாணத்தில் சிங்கள மொழிப் பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர் மாணவிகள் நீண்ட காற் சட்டை அணிந்து வர முடியாது என வடமேல் மாகாணக் கல்வித் திணைக்களம் சிங்களப் பாடசாலைகளுக்கு அனுப்பிய சுற்று நிரூபத்திற்கு இணங்க பெற்றோர்கள் ஸ்ரீலங்கா பொது ஜன முஸ்லிம் முன்னணியின் பொதுச் செயலாளர் அப்துல் சத்தார் அவர்களிடம் முன் வைத்த முறைப்பாட்டை அடுத்து அவர் கல்வி அமைச்சின் செயலாளருக்கு விடுத்த கோரிக்கைக்கு இணங்க அச்செயல் திட்டத்தை உடனடியாக வாபஸ்பெறுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் ஜயதிலக பணிப்புரை விடுத்துள்ளார்.
சிங்களப் பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகள் நீண்ட காற் சட்டைகள் அணிந்து செல்கின்றனர். அதை இல்லாமற் செய்யும் வகையில் வடமேல் மாகாண கல்விப் பணிமனை உத்தியோகபூர்வமாக பாடசாலைகளுக்கு சுற்று நிரூபமொன்றை அனுப்பி வைத்திருந்தனர்.
வடமேல் மாகாண கல்விப் பணிமனை வெளியிட்டுள்ள சுற்று நிரூபத்திற்கு இணங்க எதிர்வரும் திங்கட் கிழமை முதல் இருந்து முஸ்லிம் மாணவிகள் சிங்கள மாணவிகள் போன்று சீருடை அணிந்து பாடசாலை வர வேண்டும் என்று அச் சுற்று நிரூபத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இம்மாகாணத்தில் 1000 க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவர் மாணவிகள் சிங்கள மொழி மூலப் பாடசாலைகளில் கல்வி பயிலுகின்றனர். அவர்கள்; காலம் காலமாய் நீண்ட காற் சட்டைகள் அணிந்து சென்;று வருகின்றனர். இந்த குறித்த சுற்று நிரூபத்தின் மூலமாக முன் வைக்கப்பட்டுள்ள உடைக் கட்டுப்பாட்டினால் மாணவர் சமூகத்தின் மத்தியில் பரஸ்பர ஒற்றுமைiயும் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்த முடியாது.
அது சிறந்த பொருத்தப்பாடாகவும் தீர்வாக அமையாது என்று கல்வி அமைச்சின் செயலாளரிடம் அப்துல் சத்தார் வேண்டிக் கொண்டார். அதற்கு இணங்க கல்வி அமைச்சின் செயலாளர் அச் செயற் திட்டத்தை உடனடியாக வாபஸ்பெறுமாறு வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவுடன் தொலைபேசியில் கதைத்துள்ளதோடு வடமேல் மாகாண கல்விப் பணிமனைக்கு அறுவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகது என்று மேலும் தெரிவித்தார்.
இக்பால் அலி
27-09-2020