காதி நீதி மன்றத்தினால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும், காதி நீதி மன்றங்கள் இலங்கைக்கு தேவையற்ற ஒன்றெனக் கூறியும் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றைய தினம் முஸ்லிம் பெண்ணொருவர் கடிதம் ஒன்றை கையளித்தார்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் காதி நீதி மன்றங்கள் வழங்கும் தீர்ப்பு அநீதியானது எனவும், சில காதி நீதிபதிகள் தன்னிடம் பாலியல் கப்பம் கோரியதாகவும் அவர் தெரிவித்தார்.