உடல் நலத்துடன் கூடிய வாழ்க்கையை முறையை ஊக்குவிக்கும் நோக்கில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச நடந்துச் செல்லும் போது கூட்டத்தை நடத்தும் புதிய வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
“வோக் டோக்” என அழைக்கப்படும் இந்த கூட்டம் நடத்தும் முறைமைக்கு அமைய அமைச்சர் நாமல் ராஜபக்ச, ராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்கவுடன் இணைந்து முதல் கூட்டத்தை நேற்று நடத்தியுள்ளார்.
தொழிற்துறையினர் மற்றும் ஆரம்ப நீண்டகால பதிவு மதிப்பீடுகளை ஊக்குவிப்பதற்காக இவர்களின் இரண்டு அமைச்சுக்களும் இணைந்து செயற்படும் பல முறைகள் சம்பந்தமாக அமைச்சர்கள் இருவரும் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது.