20 திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவை பெற்றுக் கொள்ளும் வகையில் எதிர் தரப்பினருடன் பேச்சு வார்த்தைகளை நடத்தப்பட்டு வருகின்றன.
எதிர்கட்சியில் இருக்கும் திகாம்பரம் உள்ளிட்டவர்களை அரசுக்குள் உள்வாங்குவதில் சிக்கல் இல்லை.
ஆனால் ரவுப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிஷாத் பதியுத்தீன் தலைமையிலான அ.இ.ம.க போன்றவற்றை ஒரு போதும் அரசில் இணைத்துக் கொள்ள முடியாது. அவர்களை இணைத்துக் கொள்வதற்கு அரசு எதிர்பார்க்கவும் இல்லை அவர்களை இணைத்துக் கொண்டால் அமைச்சர்களாகிய நாம் எமது சொந்த ஊருக்கு செல்ல முடியாது போகும் என்று அமைச்சரவையின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.