Our Feeds


Saturday, September 26, 2020

www.shortnews.lk

திகன கலவத்தின் சூத்திரதாரிகளையும், மகசோன் பலகாயவை உருவாக்கியவர்களையும் அடையாளம் காட்ட தயார் - முன்னால் பொலிஸ்மா அதிபர் பூஜித சாட்சியம்

 



திகன முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தின் பின்னனியில் இருந்தவர்கள் யார்? மகசோன் பலகாய எனும் அமைப்பினை உருவாக்கியது யார்? அவர்களை வழி நடத்தியது யார்? என்ற எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன் எனவும் அதற்குறிய அவகாசத்தை ஜனாதிபதி ஆணைக்குழு தனக்கு வழங்க வேண்டும் எனவும் முன்னால் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர சாட்சியம் வழங்கும் போது கோரிக்கை முன்வைத்துள்ளார்.


பூஜிதவின் குறித்த கோரிக்கைக்கு பதிலளித்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உங்களுடைய சாட்சியங்கள் முடிவுற்ற பின்னர் அதற்கான சந்தர்ப்பத்தை தருகிறோம் என தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »