அரச மருந்தாக்கல் கூட்டுதாபனம் மற்றும் ஒழுங்குப்படுத்தும் விவகார அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் ´அளுத் ரட்டக், அளுத் பெஹெத்´ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட முதல் மருந்து நேற்று (16) இரத்மலானை அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தில் வெளியிடப்பட்டது.
நரம்பியல் நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் ´கெபாபென்டின்´ என்ற மருந்தையே அரச மருந்தாக்கல் கூட்டுதாபனம் தயாரித்துள்ளது.
இந்த மருந்து இதுவரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
தனியார் துறை 50 மில்லியனையும், அரச நிறுவனம் வருடத்திற்கு 15 மில்லியன் ரூபாவையும் மொத்தமாக 65 மில்லியன் ரூபா நிதி இந்த மருந்து தயாரிப்பிற்காக செலவிடப்படவுள்ளது.
எதிர்காலத்தில் இந்த மருந்தை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதுடன் இந்த மருந்து தேவையை அரச மருந்தாக்கல் கூட்டுதாபனம் பூர்த்தி செய்ய உள்ளது.
இதற்கான நிகழ்வு மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் அரச வைத்தியர்கள் சங்கத் தலைவர் டொக்டர் அனுருத பதெனிய ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.