பொதுமக்களின் நன்மைக்காக நான் வாய்மூலம் பிறப்பிக்கும் உத்தரவுகளை சுற்றுநிரூபங்களாக கருதுங்கள் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனை புறக்கணிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
பதுளை ஹல்துமுல்லவில் உள்ள வெலன்விட்ட கிராம மக்களை சந்தித்து உரையாடுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் பிரச்சினைகளை புரிந்துகொண்டு அவற்றிற்கு தீர்வை அரச அதிகாரிகள் முன்வைக்கவேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மக்களின் சார்பில் உறுதியான சரியான தீர்மானங்ளை எடுக்கும் அதிகாரங்களுக்கு எனது முழுமையான ஆதரவை வழங்குவேன் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கு அரச அலுவலகங்கள் நீண்டகாலத்தை எடுக்கின்றன என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.