ஈரான் நாட்டில் கடந்த 2018ல் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அந்நாட்டின் 27 வயதான மல்யுத்த ஷம்பியன் நவீட் அப்கரி தூக்கிலிடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
2018ல் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பொலிஸ் அதிகாரியை நவீட் அப்கரி குத்திக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே இன்று அதிகாலை அவர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகளை ஆதாரம் காட்சி சர்வதேச செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.