2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் இரண்டு பிணை முறி கொடுக்கல் வாங்கல்களின் போது 52 பில்லியனுக்கும் அண்மித்த அரச நிதி முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டதாக ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (21) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டீ. நவாஸ் மற்றும் யோசித ராஜகருணா ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போதே வழக்கை டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச பிரதி சொலிசிட்டர் நாயகம் மிலிந்த குணதிலக்க, வழங்கு மீதான எதிர்ப்புகள் மன்றில் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
வழக்கு மீதான ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் அதனை இன்று முதல் எதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் முன்வைக்க முடியும் என மனுதார்களின் சட்டத்தரணிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் பின்னர் வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.