தற்போதைய அரசாங்கத்தின் இனவாத மற்றும் பெரும்பான்மை கொள்கைகள் ஒரு போதும் நாட்டுக்கு அவசியமானவை அல்ல. அவ்வாரிருக்கையில் முன்னர் எதிர் கட்சியாக இருந்த பொது ஜன பெரமுனவை போன்று தற்போதைய எதிர் கட்சி இனவாத அடிப்படையில் செயல்படுவது கவலையளிக்கிறது என முன்னால் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லாஹ் கடந்த புதன் கிழமை பாராளுமன்றத்திற்கு அணிந்து வந்த ஆடை பல்வேறு சர்சைகளை தோற்றுவித்திருந்தது. அதாவுல்லாஹ் ஆப்கானிஸ்தான் அல்லது பாகிஸ்தான் போன்ற நாடுகளின் பாராளுமன்றத்திற்கு போவதைப் போன்ற ஆடையை அணிந்து கொண்டு வந்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் பாராளுமன்றில் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலை தளங்களில் வைரலாகின.
அதனை சுட்டிக்காட்டிய மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.