ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு கேட்டால் இது தொடர்பாக ஆராய்ந்து பார்க்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தான் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் என்றும், இது எதிர்காலத்திலும் மாறாமல் இருக்குமென அவர் தெரிவித்தார்.
தான் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக இருந்ததால் தான் ஐக்கிய மக்கள் சத்தியிலிருந்து விலகியதாக அவர் மேலும் தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க ஒரு சிறந்த தலைவர் என்றாலும், அவர் இலங்கைக்குக் கிடைக்காத சிறந்த தலைவரென மங்கள தெரிவித்தார்.