உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து வரும் ஜனாதிபதி ஆனைக்குழுவில் பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவரிடம் குறுக்குகேள்விகள் கேட்க்க வேண்டுமென உலமா சபை உள்ளிட்ட சில அமைப்புகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க நேற்றைய தினம் ஆணைக்குழுவுக்கு ஞானசார தேரர் அழைக்கப்பட்டிருந்தார்.
ஞானசார தேரரிடம் குறுக்கு கேள்வி கேட்பதற்காக உலமா சபை சார்பில் வருகை தந்திருந்த உலமா சபையின்பிரதிச் செயலாளர் மவ்லவி முர்ஷித் முளப்பர் ஆணைக்குழு விசாரனைகளை ரகசியமாக தனது கையடக்கதொலைபேசியில் பதிவு செய்தமை கண்டறியப்பட்டதினால் அங்கு சார்ச்சை ஏற்பட்டது.
ஆணக்குழுவின் விசாரணைகள் எதனையும் ஊடகங்களோ, தனி மனிதர்களோ பதிவு செய்வதற்க்கு எவ்விதஅனுமதியும் கிடையாது.
இந்த நிலையில் உலமா சபையின் பிரதி செயலாளர் ரகசியமாக விசாரனைகளை பதிவு செய்தமை சர்ச்சையைஉண்டாக்கியது.
இதன் போது உலமா சபையின் பிரதிச் செயலாளர் மவ்லவி முர்ஷித் முளப்பருக்கு ஆணக்குழு அதிகாரிகள்சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் குறித்த மவ்லவியிடம் வாக்குமூலம் ஒன்றை பெறுமாறும் ஆணைக்குழுவின் தலைவர் மூலம் ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டது.