"வெளிநாட்டு விடயங்களில் நாட்டம் கொள்வதை விட நம்நாட்டு மூலவளங்களின் பெறுமதியை விளங்கி அவற்றினால் உச்ச பயனை அடையும் மனநிலையை விருத்தி செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தியடையும். மத்திய மாகாண சிறு / நடுத்தர கைத்தொழில் வர்த்தக கண்காட்சி, மற்றும் சுற்றுலாத்துறை வர்த்தகக் கண்காட்சியாக மத்திய மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி மிகவும் பெறுமதியாகக் கருதப்பட வேண்டிய ஒன்றாகும்"
கண்டி, சிட்டி சென்டரில் நடைபெறும் மத்திய மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "INNEX 2020" மத்திய மாகாண சிறு / நடுத்தர கைத்தொழில் வர்த்தக கண்காட்சி மற்றும் சுற்றுலா வர்த்தக கண்காட்சியின் இரண்டாவது கட்டத்தின் ஆரம்ப நிகழ்ச்சி நேற்றைய தினம் மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே அவர்களது தலைமையில் நடைபெற்றதுடன் அக்குறணை பிரதேச சபைத் தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் அவர்களும் கலந்து கொண்ட தருணம்...
கண்டி மாநகர சபையின் ஆளுநர் கேசர சேனாநாயக்க அவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சேன திசாநாயக்க, உதவி இந்தியத் தூதுவராலய இரண்டாம் செயலாளர், மத்திய மாகாண பிரதம செயலாளர் திரு காமினி ராஜரத்ன, மத்திய மாகாண ஆணையாளர் மேனக்க ஹேரத், உட்பட மேலும் சில அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.