Our Feeds


Saturday, September 12, 2020

www.shortnews.lk

கடலில் குளிக்க சென்ற முஹம்மத் ரிஸ்வி நீரில் மூழ்கி மரணம்

 



மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் இரு நண்பர்களுடன் நீராடச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் கடலிர் நீரில் முழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று (11) மாலையில் இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.


வாழைச்சேனை செம்மன் ஓடை 4 பிரிவு ஹிஸ்புல்லா வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய யாவாத் முகமட் றிஸ்வி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் சம்பவதினமான நேற்று (11) அவரது நண்பர்கள் இருவருடன் பாசிக்குடா கல்மலை கடல் பகுதியில் கடலில் நீராடச் சென்று நீராடிய நிலையில் கடல் கல்மலையில் சிக்கி நீரில் மூழ்கிய நிலையில் உயிரிழந்தார்.

இதனையடுத்து சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »