Our Feeds


Saturday, September 19, 2020

www.shortnews.lk

இளைஞர்கள் மத்தியில் டிஜிட்டல் தொழிநுற்பத்தை சரியாக கொண்டு சேர்க்க வேண்டும் - அக்குரணை பிரதேச சபை தலைவர்

 


"எல்லாத் துறைகளிலும் டிஜிட்டல் மயப்படுத்தல் அதிகரித்து வரும் இன்றைய போட்டிமிக்க உலகில் எமது நாட்டு இளஞர்கள் முதல், தேவையான டிஜிட்டல் அடிப்படை வசதிகள்,  அதிவேக இணையத்தள வசதிகள் வழங்கல், மற்றும் ஆங்கில அறிவினை விருத்தி செய்தல் என்பன இளைஞர்களது தொழிற்பாட்டில் பெரும் புரட்சியினை ஏற்படுத்த வல்ல பெரும் அத்திவாரமாகும். 


எனவே, எமது நாட்டில் பாடசாலை மட்டம் முதல் வளர்ந்தோர் வரை அவர்களது கல்வி நடவடிக்கைகளிலும் அன்றாட செயற்பாடுகளிலும் டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் தொழிநுட்பம் என்பவற்றுடன் பயணிக்க நாம் தயாராக வேண்டும்"


AJ Solutions (Digital Marketing Agency Software & Web Solutions ) நிறுவனத்தை அக்குறணை மார்கெட் கட்டிடத்தில் திறந்து வைப்பதற்காக வருகை தந்திருந்த அக்குறணை பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ இஸ்திஹார் இமாதுதீன் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


இவ்வைபவத்திற்கு யட்டிநுவர பிரதேச சபை உறுப்பினர் வஸீர் முக்தார், JakLeaf Lanka நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான மொஹமட் ரஷாட், இர்பான் காதர், Choice Park நிறுவனத்தின் முகாமையாளர் ரவ்ஷான் மற்றும் AJ Solutions நிறுவனத்தின் ஏனைய கிளைகளின் ஊழியர்கள் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »