உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரனை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்றைய சாட்சி விசாரனையின் போது இரகசியமான முறையில் சாட்சி விசாரனையை வீடியோ பதிவு செய்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதி செயலாளர் மவ்லவி முர்சித் முளப்பர் மீதும் உலமா சபை சார்பில் கலந்து கொண்டிருந்த சட்டத்தரணி மீதும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழுவின் தலைவர் பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த மவ்லவியின் தொலைபேசியை பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதே வேலை மவ்லவி முர்ஷித் முளப்பர் உலமா சபையின் துணை செயலாளர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளதாக உலமா சபை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.