உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட போது தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்ட தன்னிடம் அரச புலனாய்பு பணிப்பாளராக இருந்த நிலந்த ஜயவர்தன எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆலோசனை பெறவில்லை என முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சிசிர மெண்டிஸ் தெரிவித்தார்.
நேற்று (14) மாலை ஆணைக்குழுவில் சாட்சியமளித்த முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி, நிலந்த ஜயவர்தன, தொழில் ரீதியான நடவடிக்கைகளை தன்னுடன் மேற்கொள்ளவில்லை எனவும், மாறாக அவர் பாதுகாப்புச் செயலாளருடனேயே அதனை மேற்கொண்டதாகவும் கூறினார்.
முதலில் தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வாளர்கள் அனுப்பிய தகவல்கள் குறித்து முன்னாள் அரச புலனாய்பு பணிப்பாளராக இருந்த நிலந்த ஜயவர்தன, சிசிர மெண்டிசுக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் ஆணைக்குழு வினவியது.
இதற்கு பதிலளித்த மெண்டிஸ், Top Secret என குறிப்பிட்ட அந்த கடிதம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி தனக்கு கிடைத்ததாகவும் அதில் சஹ்ரான் ஹசீம் உள்ளிட்ட தேசிய தவூப்பிப் ஜமாத் அமைப்பு கூடிய விரைவில் தாக்குதல் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தாக கூறினார்.
அப்போது மேலதிக சொலிசிட்டர் நாயகம் சாட்சியாளரிடம், எந்த மதத்தை சேர்ந்தவர் என வினவினார்.
அதற்கு பதிலளித்த மெண்டிஸ், தான் ஒரு பௌத்தன் எனவும் ஆனால் தனது மனைவி ரோமன் கத்தோலிக்க மதத்தை சார்ந்தவர் என கூறினார்.
அப்போது ஆணைக்குழு, விசேட நிகழ்வுகளின் போது மனைவி உங்களை கத்தோலிக்க தேவாலயத்திற்கு அழைத்து செல்வாரா என வினவியதற்கு அவர் ஆம் என பதிலளித்தார்.
அப்படியிருக்கையில் ஏப்ரல் 8 குறிப்பிட்ட ஒரு தேவாலயம் தாக்கப்படவுள்ளது என அறிந்து வைத்திருந்த நீங்கள் தாக்குதலை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என மேலதிக சொலிசிட்டர் நாயகம் சாட்சியாளரிடம் கேட்டார்.
அதற்கு பதிலளித்த மெண்டிஸ், ஏப்ரல் 08 ஆம் திகதி காலை எனக்கு கடிதம் கிடைத்ததும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவை சந்திக்க முயற்சித்தேன், ஆனால் அது கைகூடவில்லை. பிற்பகல் வேளையில் அவரை சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது தேவாலயங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளமை தொடர்பில் தமக்கு வெளிநாட்டு புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளரை தெளிவுப்படுத்தியதாகவும் அப்போது அவர் நாளை நடைபெறவுள்ள ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் நிலந்தவிற்கு இது தொடர்பில் பேச சொல்லலாம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளரால் தாம் அறிவுறுத்தப்பட்டதாக மெண்டிஸ் தெரிவித்தார்.
இது குறித்து அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? என மேலதிக சொலிசிட்டர் நாயகம் சாட்சியாளரிடம் கேட்டார்.
அதற்கு அவர் அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்க மறந்து விட்டதாக கூறினார். ஆனால் அவரிடம் முதலில் கசிந்த உளவுத்துறை தகவல்கள் குறித்து கலந்துரையாடுவது அரச புலனாய்வு பணிப்பாளரின் பொறுப்பு என கூறினார்.
புலனாய்வு ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இந்த பிரச்சினை சேர்க்கப்படவில்லை என்றாலும், புலனாய்வு ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஒருவரின் சொந்த உளவுத் தகவல்கள் பற்றி கலந்துரையாடுவது பாரம்பரிய நடை முறை என கூறினார்.
அப்போது அரச மேலதிக சொலிசிட்டர் நாயகம் சாட்சியாளரிடம், நிலந்த ஜயவர்தன உளவுத்துறையின் மூலப் பிரதியை உளவுத்துறைறைக்கு அனுப்பியதன் மூலம் உங்களிடமிருந்து ஏதோ ஒரு ஆலோசனையை எதிர்பார்கின்றார் என்பது புரியவில்லையா? என வினவினார்.
அதற்கு பதிலளித்த அவர், ´நான் தேசிய உளவுத்துறையின் தலைவராக இருந்தபோதிலும், அவர் எனக்கு கீழ் செயற்படவில்லை எனவும். மாறாக அவர் பாதுகாப்பு செயலாளரின் கீழ் கடமைப்புரிந்தாகவும் கூறினார். எனவே அவருக்கு என்ன ஆலோசனை வழங்க வேண்டும் என எனக்குத் தெரியவில்லை´ என தேசிய புலனாய்வுத் பிரிவின் முன்னாள் தலைவர் கூறினார்.
அப்படியானால் தேசிய புலனாய்வுத் தலைவர் பதவியா? அல்லது அரச புலனாய்வு துறையின் பணிப்பாளர் பதவியா முதன்மையானது என ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் வினவினார்.
இதற்கு பதிலளித்த மெண்டிஸ், ´ஐயா, தேசிய புலனாய்வுத் தலைவராக, நான் இணைப்பாளராக மாத்திரமே கடமையாற்றினேன். ஆனால் அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் பதவி என்பது புலனாய்வு தகவல்களுக்கு பொறுப்பு கூறும் பதவியாகும்´ என தெரிவித்தார்.