ஒவ்வொரு வௌ்ளிக்கிழமையும் தேசிய உடை அணிந்து சேவைக்கு சமூகமளிக்குமாறு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அரச ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பன்னல பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அணியப்பட வேண்டிய ஆடை தொடர்பான விதிமுறைகள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது சட்டம் இல்லை எனவும் தேசிய கைத்தொழிலை ஊக்குவிக்க தேசிய ஆக்கங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.