பதுளை பிரதேசத்திலுள்ள 9 வளைவு பாலம் எனப்படும் தெமோதர பாலத்தை தேசிய உரிமையாக பிரகடனப்படுத்துகின்றமை தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எமது செய்தி சேவை ராஜாங்க அமைச்சரிடம் வினவிய போதே அவர் இதனை கூறினார்.
தேசிய உரிமைகளாக பிரகடனப்படுத்தப்பட வேண்டிய இடங்கள் தொடர்பிலான தகவல்கள் தற்போது திரட்டப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பட்டியலில் 9 வளைவு பாலம் எனப்படும் தெமோதர பாலமும் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.