இலங்கையில் மாடறுப்பு தடை செய்யப்பட்டால் பல பிரச்சினைகள் ஏற்படும் என விலங்கு உற்பத்தி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் குலராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள மாடுகளின் மொத்த எண்ணிக்கை 12 லட்சத்து 27 ஆயிரத்து 379 ஆகும் . அதில் 50 % ஆண் மாடுகள் உள்ளன. இலங்கையில் உள்ள மாட்டுப் பட்டிகளில் காளை மாடுகளே அதிகம் இருப்பதால், அவற்றை உணவுக்காக அறுக்காது போனால், அந்த விலங்குகள் சம்பந்தமாக வேலைத்திட்டம் இருக்க வேண்டும்.
இதனால், மனிதாபிமானமாக மாடுகளை அறுக்கக் கூடிய கொல்களம் நிர்மாணிக்கப்பட வேண்டும்.விலங்கு வதையின்றி மாடுகளை அறுக்கக் கூடிய வகையில் உரிய முறையுடன் கூடிய கொல்களம் நிர்மாணிக்கப்பட வேண்டும்.
அப்படி செய்யவில்லை என்றால், பால் உற்பத்தியாளர்கள் பெரிய பாதிப்புகளை சந்திக்க நேரிடும். காளை மாடுகள் நாட்டுக்கு பெரிய சுமையாக மாறும் எனவும் குலராஜ் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள குறித்த சங்கத்தின் நிர்வாக செயலாளர்,
விஷங்கள் இல்லாத உணவுக்காக பயன்படுத்தக் கூடிய ஒரே இறைச்சி மாட்டிறைச்சி எனவும் அதனை தடை செய்தால், மக்களின் அடிப்படை உரிமை இல்லாமல் போகும்.
மாட்டிறைச்சியை உண்ணும் உரிமை மக்களுக்கு இருக்கின்றது. இதனால், இந்த தீர்மானத்தை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.