Our Feeds


Wednesday, September 16, 2020

www.shortnews.lk

கினற்றிலிருந்து 40 நாள் சிசு சடலமாக மீட்ப்பு - தாய் குளிக்க சென்ற வேலையில் சம்பவம்

 



மட்டக்களப்பு வன்னியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து 40 நாள் சிசு ஒன்று உயிரிழந்த நிலையில் நேற்று (15) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.


பிறந்து நாற்பது நாள் கொண்ட பெண் பிள்ளையான கோஷனி என்ற சிசுவே இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் சம்பவ தினமான நேற்று வழமைபோல கணவன் வேலைக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் சிசுவுடன் தாய் இருந்துள்ளதாகவும் மாலை 5.30 மணியளவில் உறவினர்கள் கோவிலுக்கு சென்றிருந்த நிலையில் குழந்தையுடன் தாய் தனிமையில் இருந்ததாகவும் அப்போது குழந்தையை வீட்டின் அறையில் கட்டிலில் படுக்கவைத்துவிட்டு வீட்டின் கதவை சாத்திவிட்டு மலசல கூடத்திற்கு சென்று திரும்பி வந்தபோது கட்டிலில் படுக்கவைத்த குழந்தை காணாமல் போயுள்ளதாகவும் தாய் கூறியுள்ளார்.

இதனையடுத்து குழந்தையை வீடு முழுவதும் தேடிய பின்னர் கணவர் மற்றும் உறவினர்களுக்கு சம்பவம் தொடர்பில் குறித்த தாய் தெரியப்படுத்தியுள்ளார்.

பின்னர் அவர்களும் விரைந்து வந்த குழந்தையை தேடியுள்ளனர் இதன்போது வீட்டின் முன் பகுதியில் அமைந்திருந்த கிணற்றில் உயிரிழந்த நிலையில் சிசு இருப்பதை கண்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தடயவியல் பிரிவு மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை பிரேத பரிசோனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »