Our Feeds


Wednesday, September 30, 2020

www.shortnews.lk

சுமனரத்ண தேரருக்கு பிணை, நவம்பர் 27ல் நீதி மன்றில் ஆஜராக உத்தரவு

 



மட்டக்களப்பு பண்டாரவெளி பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பாக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில் இன்று புதன்கிழமை (30) மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தன தேரர் உட்பட 3 ஆஜயரான நிலையில் அவர்களை 2 இலச்சம் ரூபா சரிரப் பிணயில் விடுவித்து கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்குமாறும்  எதிர்வரும் நவம்பர் 27 திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு  நீதவான் உத்தரவிட்டார்.

செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பண்டாரவெளி பகுதியில் பௌத்த மத அடையாளம் இருப்பதாக குறித்த பகுதியில் கடந்த காலங்களில் சுமணரத்தன தேரா சென்ற நிலையில் பல சர்ச்சைகள் இடம்பெற்று நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்றுவருகின்றது.

குறித்த இடத்தில் தொல்லியல் திணைக்களம் அடையாளம் கண்டு அங்கு திணைக்களம் தற்காலிக கொட்டகை அமைத்து தொல் பொருள் ஆராச்சிகள் இடம் பெற்று வருகின்றது. இந்த நிலையில் கடந்த 21 ம் திகதி அங்கு சென்ற அம்பிட்டிய சுமணரத்தன தேரர் தொல் பொருள் திணைக்கள அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பாக கரடியானு பொலிசார் அம்பிட்டிய சுமணரத்தன தேரர் அவருடன் சேர்ந்த 3 பேருக்கும் இவர்களுக்கு எதிராக ஆதிகாரிகளை தாக்கியது, அவர்களை தடுத்துவைத்தது அதிகாரிகள் கடமையை செய்யாவிடாது இடையூறு ஏற்படுத்தியது போன்ற குற்றச்சாட்டு சாட்டப்பட்டு வழக்கு தாக்குதல் செய்தனர்.

இதனையடுத்து இன்று புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் அம்பிட்டிய சுமணரத்தன தேரர் உட்பட 3 பேர் ஆஜராகினர் இதன்போது இவர்களை நீதவான் 2 இலச்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுவித்ததுடன் தொல்லியல் திணைக்களத்துக்கு இடையூறுவழங்க கூடாது, பொதுமக்களை அச்சுறுத்தக் கூடாது எனவும் எச்சரித்து ,கரடியாறு பொலிஸ் நிலையத்தில் சாக்குமூலம் வழங்குமாறு எதிர்வரும் நவம்பர் 27 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை நீதிமன்ற பகுதில்  பலத்த பாதுகாப்பு நடவடிக்கை பொலிசார் ஈடுபட்டுள்ளதுடன். தோர் 50 மேற்பட்ட அவரது ஆதரவாளர்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »