Our Feeds


Saturday, September 12, 2020

www.shortnews.lk

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1,172 பேர் கொரோனாவில் பலி - 95,735 பேருக்கு புதிதாக தொற்று

 



இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 95,735 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு 1,172 பேர் பலியாகி உள்ளனர்.

இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, நேற்றைய தினம் (10) 8 மணி வரையிலான நேரத்தில் புதிதாக 95,735 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,465,864 ஆக அதிகரித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) வெளியிட்ட தகவல்படி, வியாழக்கிழமை (செப். 10) வரை நாடு முழுவதும் 52,934,433 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மொத்த பாதிப்பு: 4,465,864
உயிர் பலி: 75,062
குணமடைந்தோர்: 3,471,784
சிகிச்சை பெற்று வருவோர்: 919,018

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »