நைஜீரியாவின் கோகி என்ற நகரில் பரபரப்பான வீதியொன்றில் பெற்றோல் பவுசர் ஒன்று கவிழ்ந்து தீப் பிடித்ததில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நேற்று புதன் கிழமை வேகக் கட்டுப்பாட்டை இழந்த பவுசர் ஐந்து கார்கள், மூன்று முட்சக்கர வண்டிகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கில் ஆகியவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த அணர்த்தத்தில் 23 பேர் கொல்லப்பட்டதாகவும் ஒரு குழந்தை பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் நைஜீரிய அதிகாரி உறுதி செய்துள்ளார்.
விபத்தில் சிக்கிய வாகனங்களில் பயணித்தவர்கள் உடல் கருகிய நிலையில் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி முஹம்மது புகாரி தனது கவலையை வெளியிட்டுள்ளார்.