Our Feeds

Monday, September 28, 2020

www.shortnews.lk

இலங்கையில் இதயம் சார்ந்த நோய்களினால் ஒரு நாளைக்கு 100 பேர் மரணம்.

இலங்கையில் நாளொன்றுக்கு 100 உயிர்களையும் உலகலாவிய ரீதியில் வருடமொன்று 17 மில்லியன் உயிர்களையும் காவு கொள்ளும் உயிர்கொல்லி நோயாக இதய நோய் காணப்படுகிறது என இதயம்சார் நோய் விஷேட தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

குணப்படுத்தக் கூடிய இந்நோயிலிருந்து பாதிக்கப்படுபவர்களை  பாதுகாக்கும் நோக்கில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் இலசவ பரிசோதனைகளை நடத்துதல் என்பவற்றை இலக்காகக் கொண்டு வருடாந்தம் செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி சர்வதேச இதய தினம் கொண்டாடப்படுகிறது.

தொற்றா நோய்களால் உலகலாவிய ரீதியில் 83 சதவீத மரணம் ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் மரணத்திற்கு பிரதான காரணியாக இருப்பது இதயம் மற்றும் இரத்த குழாயுடன் தொடர்புடைய பிரச்சினைகளாகும். இதனால் உலகளாவிய ரீதியில் வருடமொன்றுக்கு 17.9 மில்லியன் உயிரிழப்புக்கள் பதிவாகின்றன. 

மனோ சித்ரா

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »