குருநாகல் அண்டிய பகுதிகளில் நன்கு பயிற்றப்பட்ட 1200 போதைப் பொருள் வியாபாரிகள் பாடசாலை மாணவர்களை இலக்காக கொண்டு போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபடுவதாகவும் விரைவில் அவர்களை கைது செய்ய பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குருநாகல் கல்வித் திணைக்களப் பணிப்பாளர் WM பாலசூரிய தெரிவித்துள்ளார்.
குருநாகல், புத்தளம் மற்றும் அனுராதபுர மாவட்டங்களில் இவ்வாறு பல்வேறுபட்ட போதைப் பொருள் விற்பனையில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களின் பிரதான இலக்கு பாடசாலை மாணவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி குழுவின் பிடியில் கடந்த 09 மாதங்களில் மாத்திரம் சுமார் 6200 மாணவர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.