உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும், தமக்கும் இடையில் இடம்பெற்ற தொலைப்பேசி உரையாடல் தொடர்பான தகவல்களை அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன நேற்று (14) ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன் வைத்தார்.
இதேவேளை நிலந்த ஜயவர்தனவின் கையடக்க தொலைப்பேசியில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட மேலும் பல கலந்துரையாடல்கள் இருக்கின்றனவா? என்பதை ஆராய உடனடியாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவினர் குறித்த தொலைப்பேசியை தமது பொறுப்பில் எடுக்குமாறு ஆணைக்குழுவின் தலைவர் உத்தரவிட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.
அந்த உரையாடலின் ஓலிப்பதிவு காலம் 25 நிமிடங்களும் 4 செக்கன்களும் ஆகும்.
எனினும் அந்த தொலைப்பேசி உரையாடலின் ஒரு பகுதி மாத்திரமே கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலந்த ஜயவர்தன : சேர்.. இது தொடர்பில் நாம் அறிந்திருந்தோம். ஆனால் இவ்வளவு நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என கொடுத்ததே தவறு.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் : நல்லது... என்னை தெளிவுப்படுத்தியதாக கூறுங்கள். நான் I.Gயை தெளிவுப்படுத்தியுள்ளேன்.
நிலந்த ஜயவர்தன : சேர் நான் 7 ஆம் திகதி அறிவித்தவுடன், Well Received என சேர் கூறினீர்கள் தானே
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் : ஜனாதிபதியிடம் சொல்லாததே இங்குள்ள பிரச்சினை...
நிலந்த ஜயவர்தன : ஜனாதிபதியிடம் சொன்னீர்களா? என என்னிடம் கேட்கவில்லை. ஜனாதிபதியிடம் சொல்லாததே பிரச்சினை என பத்திரிகைகளில் செய்தி வெளியாகி வருகின்றது. எப்படியானாலும் நான் சொல்லவில்லை.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் : சரி நானும் சொல்லவில்லை நீங்களும் சொல்லவில்லை.
நிலந்த ஜயவர்தன : ஜனாதிபதி 20 ஆம் திகதி இலங்கையில் இருக்கவில்லை தானே... அப்படியானால் பிரதமருக்கு சொல்ல வேண்டும் அல்லவா? நான் பிரதமருக்கு சொல்லவில்லை. அது கடமை துஸ்பிரயோகமாக அமையாது. இது ஒரு பெரிய பிரச்சினையாகாது. புத்திரிகைகளில் இதனை பெரிய பிரச்சினையாக்கியுள்ளனர். உண்மையில் இது ஒரு அரசியல் சார்ந்த பிரச்சினையாகும்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் : தவறுகள் யாராலும் நிகழலாம். இப்போது இவர்கள் என்னை கைது செய்ய போகிறார்கள் நான் பாதுகாப்புச் செயலாளர் பதவியில் இருந்து விலகியுள்ளேன்.
நிலந்த ஜயவர்தன : IG Resign இராஜினாமா செய்து விட்டாரா?
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் : இல்லை. IG விலகவில்லை என்பதற்காக எம் இருவரையும் தாக்குவது நியாயம் இல்லை.
நிலந்த ஜயவர்தன : சேர். ஜனாதிபதியை சந்திப்பது சிறந்தல்லவா?