கட்டான, அக்கறபஹ பிரதேசத்தில் சுமார் 3 கோடி ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்கு வந்த 5 பேரைக் கொண்ட குழுவினால் இக்கொள்ளைச் சம்பவம் புரியப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கொள்ளையர்கள் துப்பாக்கியைக் காட்டி வீட்டிலிருந்தோரை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக கட்டான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.