முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் கொழும்பு பங்கின் மூன்று ஆயர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அவர்களை நாளைய தினம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அவர்களை இன்று (23) பிற்பகல் 2 மணிக்கு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் பொய்யான தகவல்களை தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் கடந்த 20 ஆம் திகதி ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அது குறித்து விசாரிக்கவே ஆணைக்குழுவுக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் கொழும்பு போராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தாக்குதல் தொடர்பில், ஏற்கனவே அறித்திருந்தாக முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ ஆணைக்குழுவில் அண்மையில் சாட்சியம் வழங்கையில் தெரிவித்திருந்தார்.
அவரின் சர்ச்சைக்குரிய தகவல் குறித்து விசாரணை நடத்தவே கொழும்பு பங்கின் மூன்று ஆயர்களுக்கும் ஆணைக்குழு இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.