அரசாங்கத்துடன் இணைவது குறித்து தனது கட்சி பேச்சுவார்த்தைகளை
மேற்கொண்டு வருகின்றது என விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.
தனது கட்சிக்கு
கிடைக்கும் ஆசனங்களை அடிப்படையாக வைத்து அரசாங்கத்துடன் அதிகளவு பேரம்பேசலில் தனது
கட்சியால் ஈடுபடமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் தனது கட்சியை சேர்ந்த ஒருவராவது தெரிவு செய்யப்பட்டால் அது பேரம்பேசுவதை
இலகுவாக்கிவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்
மட்டக்களப்பை தன் மூலம் அபிவிருத்தி செய்வது இலகுவாகிவிடும் எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.
தனது
சர்ச்சைக்குரிய கருத்து குறித்து தெரிவித்துள்ள கருணா தனது ஒரு மணித்தியால உரையில் 30 செக்கண்ட் மாத்திரமே வெளியாகியது என
தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் உயிர்கள் இழக்கப்பட்டன அது மீண்டும் இடம் பெறக்கூடாது என
தெரிவித்துள்ள அவர் தான் அவ்வாறான அர்த்தத்தில் வெளியிட்ட கருத்தினை தனிநபர்
ஒருவர் எடிட் செய்தார் அதனால் சர்ச்சை உருவானது என குறிப்பிட்டுள்ளார்.
சஜித்பிரேமதாசவின்
தந்தையே விடுதலைப் புலிகளிற்கு 5000
துப்பாக்கிகளையும்
5000 கைக் குண்டுகளையும்
வெடிமருந்துகளையும் வழங்கினார் என தெரிவித்துள்ள கருணா விடுதலைப் புலிகளை
பலப்படுத்துவதற்கு 250 மில்லியன் ரூபாய் நிதி
உதவியையும் பிரேமதாச வழங்கினார் என தெரிவித்துள்ளார்.