இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார்
சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவரை தேர்ந்தெடுக்கும்
தேர்தலில் இம்முறை பங்கேற்க முடியாது என இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள்
தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் நிறைவேற்றுக் குழுவில்
பங்கேற்காத ஒருவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் மேலும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
எனவே தனக்கு தெரிந்த சட்டங்களுக்கு அமைய எதிர்வரும் சர்வதேச
கிரிக்கெட் சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி, குமார்
சங்கக்காரவிற்கு இல்லை எனவும் சுமதிபால சுட்டிக்காட்டினார்.
சர்வதேசத்தில் இலங்கை சார்பில் போட்டியிடக் கூடிய
தகுதிகளைக் கொண்ட சிறந்த வீரர் குமார் சங்கக்கார எனவும் அவர் சிறந்த மனிதநேயமுடைய
நபர் எனவும் இதன்போது திலங்க சுமதிபால குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பின் போதே திலங்க சுமதிபால இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.