முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, குற்றப்புலனாய்வுத்
திணைக்களத்தில் இன்று வாக்குமூலமளிக்கவுள்ளார்.
நல்லாட்சியின்போது இடம்பெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்கல்கள் மோசடி தொடர்பிலேயே
வாக்குமூலம் வழங்கவுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு சமுகமளிக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில்
விக்கிரமசிங்கவுக்கு விடுத்திருக்கும் அறிவுறுத்தலுக்கு அமையவே, அவர் இன்றையதினம் வாக்குமூலம் அளிக்கவுள்ளார்.
பிணைமுறி கொடுக்கல்-வாங்கல்கள் மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
ஆகிய இருவரிடமும் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு, சட்டமா
அதிபர் பணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.