வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் அருகே கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது தொடர்பில் விசாரணைகள் நடத்துவதற்காகவே அப்பகுதியில் தமிழ் இளைஞர்கள் விசாரணைகளுக்காக கைதுசெய்யப்பட்டதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.
தமிழ் ஊடகங்களின் பிரதானிகளை நேற்றுக் காலை பிரதமர் சந்தித்தபோது வடக்கில் இளைஞர்கள் கைதுசெய்யப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், இலங்கையின் தென் பகுதியில் அதிகரித்து காணப்படும் பாதாள உலக குழுக்களை போன்றே, வடக்கிலும் சில குழுக்கள் செயற்பட்டு வருகின்றன.
குண்டுகள் மீட்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படாவிட்டால் அதற்கு என்ன சொல்வார்கள்? என்றும் கேள்வியெழுப்பினார். “இராணுவ முகாம்கள் அருகே குண்டுகள் மீட்கப்படும்போது அது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் இளைஞர்கள் விசாரணைக்காகவே அவ்வாறு கைது செய்யப்படுகின்றனர்.
அது அப்பகுதியின் பாதுகாப்பு, மக்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. யாரையும் வீணாக பாதுகாப்புத் தரப்பினர் கைதுசெய்யமாட்டார்கள்’’ என்றும் குறிப்பிட்டார் பிரதமர்.