ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 44ஆவது அமர்வின் தொடக்க உரையில், இலங்கையில் மத சிறுபான்மையினரான முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுவது குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் கவலை வெளியிட்டுள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் 44ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் ஆரம்பித்தது. இதில் தொடக்க உரையாற்றிய மிச்செல் பச்லெட்,
பல நாடுகளில் சிறுபான்மை சமூகங்களின் உறுப்பினர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான வெறுப்பு அதிகரித்த அளவில் உள்ளது. சில சந்தர்ப்பங்களில், அதிகாரிகளாலும் இவை நடைபெறுகிறது. இதன் பின்னரான காலப்பகுதியில் இலங்கையிலும் இந்தியாவிலும் முஸ்லிம் சிறுபான்மையினர் களங்கம் மற்றும் வெறுப்பு பேச்சுகளால் குறிவைக்கப்படுகிறார்கள்.
பல்கேரியாவில் ரோமா மக்கள் பொது சுகாதார அச்சுறுத்தலாக களங்கப்படுத்தப்பட்டுள்ளனர். சில உள்ளுர் அதிகாரிகள் ரோமா குடியேற்றங்களைச் சுற்றி சோதனைச்சாவடிகளை அமைத்து பூட்டுதல்களைச் செயற்படுத்துகின்றனர். பாகிஸ்தானில் மத சிறுபான்மையினர் வெறுக்கத்தக்க பேச்சுக்கு தீவிரமாக உள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மக்களின் மனித உரிமைகள் பேணப்பட வேண்டும். மனித உரிமை மீறலுக்கு ஒரு கருவியாக கொரோனா தடுப்பு நடவடிக்கையை பாவிக்கக்கூடாது என்றார்.
இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா. கண்காணிப்பாளரின் அறிக்கையின் அடிப்படையில், இலங்கை தொடர்பான விவாதமும் இந்தக் கூட்டத் தொடரில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது