சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுதலை
செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம்
நிராகரித்துள்ளது.
சட்டத்தரணியை விடுதலை செய்யுமாறு கோரும் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவேளை நீதவான் ரங்க திசநாயக்க மனுவை நிராகரித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நபரை விடுதலை செய்வதற்கான அதிகாரம் தனக்கில்லை என நீதவான் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த
ஞாயிறு குண்டுதாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக சட்டத்தரணி சிஐடியினரால்
கைதுசெய்யப்பட்டுள்ளார்.