Our Feeds


Thursday, July 2, 2020

www.shortnews.lk

ஊரடங்கு காலத்தில் அதிகரித்த மின்சார கட்டணத்திற்கு நிவாரணம் வழங்க முயற்சி

 


ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலத்தில், அதிகரித்த மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மனித்துள்ளது.

குறித்த நிவாரணத்தை எவ்வாறு பெற்றுக்கொடுப்பது என்பது தொடர்பில் கலந்து ஆலோசிப்பதற்காக இன்று (02) குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலங்களில் மின் கட்டணம் பாரியளவில் அதிகரித்து காணப்பட்டதாக பாவனையாளர்களினால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து, குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் நேற்று (01) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தௌிவுப்படுத்தப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, மின் பாவனையாளர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.



மேலும் நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்படும் விதம் தொடர்பிலான அறிக்கையை வெகுவிரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »