தீவிரவாதிகள் இன்னொரு தாக்குதலை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை
பொலிஸார் நிராகரிக்கவில்லை என ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் முன்னாள் தலைமை
அதிகாரி ரொகான் சில்வா தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்
முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் தொடர்கின்றனவா என்ற
கேள்வக்கு பதில்அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேசிய
தவ்ஹீத் ஜமாத் பயன்படுத்திய பயிற்சி முகாமொன்று அம்பாந்தோட்டையில் கண்டுபிடிக்கப்பட்டது
என குறிப்பிட்டுள்ள அவர் தென்பகுதியின் சில இடங்களில் தீவிரவாதிகள்
செயற்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மாத்தறையில்
அவர்களின் பல செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் மாத்தறையின்
மசூதியொன்றிற்கு அருகில் திருகோணமலையை சேர்ந்த ஒருவரை கைதுசெய்தோம் என
குறிப்பிட்டுள்ளார்.
ஜின்தோட்டையில் இரு முஸ்லீம் குழுக்கள் மத்தியில் மோதல்கள்
இடம்பெற்றன, ஒரு குழுவினருக்கு சிங்களவர்கள் ஆதரவளித்தனர், சிங்களவர்களும்
முஸ்லீம்களும் காணப்பட்ட குழு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட மற்றைய குழுவை
தாக்கியது என அவர் தெரிவித்துள்ளார்.
காலியின் மாகாமோதர பகுதியில் தீவிரவாத
குழுவொன்று செயற்படுகின்றது அந்த பகுதியினை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்
எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
-தினக்குரல்