Our Feeds


Wednesday, July 1, 2020

www.shortnews.lk

அலி சப்ரி விலை போகாத அரசியல்வாதி - தனசிரி அமரதுங்க புகழாரம்

 

விலைபோகாத அரசியல்வாதிக்கு அலிசப்ரி சிறந்த உதாரணம் ஏனைய சில முஸ்லிம் அரசியல் தலைவா்கள் போன்று ஒரு போதும் அவர் விலைபோனதில்லை என தெஹிவளை கல்கிசை முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்க தெரிவித்தார். தெஹிவளை பள்ளிவாசல் சம்மேளனம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் உரையாற்றிய போதே தனசிறி இதனைக் குறிப்பிட்டார். தெஹிவளை சஹரான் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் கூறியதாவது: 
அலிசப்ரி விலைபோகாத அரசியல்வாதி. 
இவருக்கு அமைச்சர் பதவியோ அல்லது பிரதியமைச்சர் பதவியோ கிடைப்பது உறுதி. 
சட்டத்தரணி அலி சப்ரிக்கு ராஜபக்ஷ குடும்பம் ஜனாதிபதி கடமைப்பட்டுள்ளது. கடந்த 14வருடங்களாக இவர்களது பல வழக்குகளில் ஆஜரான அலிசப்ரி, ஒரு சதமேனும் அறவிடவில்லை. எத்தனையே பிரபல்யமான சட்டத்தரணிகள் இருந்தும் ஜனாதிபதி கோட்டபாயவுக்கு நம்பிக்கையானவராகவே அலிசப்ரி இருக்கிறார். அமெரிக்க பிரஜையென 
வழக்குத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட தடங்கலை ஏற்படுத்திய வழக்கை வென்றெடுத்தவர் இவர்.எனக்கு முஸ்லிம்களுடன் நியைத் தொடர்புகள் உண்டு. 
தெஹிவளை கல்கிசையில் முஸ்லிம்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி அமைதியான சூழ்நிலையில் வாழ்கின்றனர்.
என்னிடம் மதவாதம் இனவாதம் இல்லை. சகலரது பிரச்சினைகளிலும் முன்னின்று உதவக்கூடிய சகலதையும் தொடா்ந்து செய்வேன் என்றார்.  
 ஜனாதிபதி சட்டத்தரனி ராசீக் சருக் தனது உரையில் ”முன்னாள் அமைச்சர்கள் எம்.எச்.முஹம்மத், ஏ.சி.எஸ் ஹமீத், அபுசாலி பாக்கீா்மாக்கார்.
பதியுத்தீன் மஹ்மூத் ஆகியோர் சிங்கள, முஸ்லிம்கள் மத்தியில் இன.மத,கடசி வேறுபாடின்றி நீண்ட காலம் அரசியல் செய்தனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை காலம் சென்ற அஷ்ரஃப் ஆரம்பித்த பின்பு தான் பெளத்த மக்களுக்கும் முஸ்லிம் மக்களும் பிரித்தாளப் பட்டனர். இதனையே அவருக்கு பின்னால் வந்த தலைமைகளும் தொடா்கின்றன.
நாம் அவ்வாறு இல்லாமல் சிங்கள தமிழ் முஸ்லிம் என்ற வித்தியாசம் இன்றி தேசிய கட்சிகள் ஊடாகத்தான் நமது பிரச்சினைகளை சிங்களத் தலைவர்களிடம் பேசி தீர்க்க வேண்டும் என்றார். இங்கு ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் உரையாற்றினார்.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »