பொதுவிடங்களில் முகக் கவசம் அணியாது நடமாடிய 1,441 பேரை, சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நேற்று (29) மாலை 06.00 மணி முதல் 12 மணித்தியாலங்களாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின்போது, தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியோர் கண்டுபிடிக்கப்பட்டனர்.
மேல்மாகாணத்தில் பொதுவிடங்களில் முகக் கவசம் அணியாதிருந்த 1,280 பேர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான சோதனைகள் எதிர்வரும் வாரத்திலும் தொடரும் என்பதோடு, பொதுவிடங்களில் முகக் கவசம் அணியாதிருக்கும் பொதுமக்கள் மீது தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என, பொலிஸார் தெரிவித்தனர்.