ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூத்த நீதிபதிகள் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விடயத்தில் ஆணைக்குழுவிற்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமையினால் அது தொடர்பில் நாங்கள் தலையீடு செய்வதில்லை.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் இந்த ஆணைக்குழு முன்னிலையில் விசாரணை செய்யப்படுவார்களா என வினவிய போது, ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானிக்கப்படும் பட்சத்தில் யார் வேண்டுமானாலும் அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படலாம் என்றார் பிரதமர்.
நேற்று தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த போது பிரதமர் மேற்கண்டவாரு தெரிவித்தார்.