விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபானி இம்ரானின் தந்தை நேற்றிரவு (17) கூரிய ஆயுத்தால் தாக்கப்பட்டார்.
நேற்று பிற்பகல் மாளிகாவத்தை சத்தர்ம மாவத்தைக்கு அருகில் முச்சக்கரவண்டியில் வருகை தந்த மூன்று பேர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
இதன்போது, காயமடைந்த கஞ்சிபானி இம்ரானின் தந்தை சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி மற்றும் குற்றச்செயலுக்காக பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதமுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
42 வயதுடைய அனுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மாளிகாவத்தை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவம் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.