Our Feeds


Monday, June 15, 2020

www.shortnews.lk

மொட்டுக் கட்சியில் மறைந்து பாராளுமன்றத்திற்கு செல்ல மைத்திரி முயற்சிக்கிறார் - பிரசன்ன ரனதுங்க

 


Rebuilding is a difficult task - Minister Prasanna Ranatunga - OSL ...
பொது ஜன பெரமுன கட்சியில் மறைந்து பாராளுமன்றத்திற்குள் குதிப்பதற்கு முயற்சிக்கும் மைத்திரி பால சிறிசேனவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நாங்கள் மிகவும் அவதானத்துடன் இருக்கின்றோம் என சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பியகம பிரதேசத்தில்  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்பிரசன்ன ரணதுங்க தெரிவித்ததாவது



இலங்கையில் இருண்ட மற்றும் மிகவும் தோல்வியுற்ற ஆட்சி காலம் ரணில்- மைத்திரி அரசு.

இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு உறுதியான ஆதரiவை வழங்கக்கூடிய ஒரு அரசாங்கத்தை நிறுவுவது மக்களின் பொறுப்பு

நல்லாட்சி என்ற போர்வையில் நாட்டை அழித்தவர்கள் இன்று புத்திசாலிகளாக நடந்துகொள்கிறார்கள்.

கடந்த 2015 ஆம் ஆண்டு மக்களுக்குப் பொய் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இந்த நாட்டை அழித்தது. ரணில் மைத்திரியும் நாட்டை இருபுறமும் இழுத்தனர்.


மத்திய வங்கியைக் கொள்ளையடித்தார்கள். ராஜபக்ஷ் குடும்பத்தை சிறையிலடைத்தார்கள். தேரர்கள் இராணுவத்தினர்அரச ஊழியர்களைப் பழி வாங்கினார்கள். நாட்டின் பொருளாதாரத்தை இல்லாமலாக்கினார்கள்.
நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் காணப்பட்டது. புலிகள் புத்துயிர் பெற்றனர். கடந்த சில நாட்களாக விடுதலைப் புலிகளின் இணையத் தாக்குதல் நாட்டின் முக்கிய வலைத்தளங்களில் இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மண்டலங்களை நிறுவுவதற்கான திட்டங்களை யார் கொண்டு வந்தார்கள்?

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு முன்னர் இந்திய உளவுத்துறை தகவல் வழங்கியது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியும் பிரதமரும் அதனை அறிந்திருந்தனர். பொலிஸ்மா அதிபருக்கும் அது தெரியும்.



இதைத் தடுக்க கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் என்ன செய்தார்கள்? நம் நாட்டு மக்கள் பலியிடப்பட்டுள்ளனர்.

நல்லாட்சியாக நாட்டிற்கு இவ்வளவு தீங்கு செய்த எந்த அரசாங்கமும் இலங்கை வரலாற்றில் இல்லை. நல்லாட்சியின் சகாப்தம் இலங்கையின் இருண்ட சகாப்தமாக மாறியுள்ளது.

அன்று நாங்கள் மொட்டினை உருவாக்கும் போது, முன்னாள் மைத்திரி சிறிசேன ஜனாதிபதி வீதி வீதியாகச் சென்று அழைக்கின்றோம் என்றும் மொட்டு உருவாகினால் பார்ப்போம் என தெரிவித்துவிட்டு தற்போது மொட்டுச் சின்னதில் போட்டியிடுகிறார்.

இந்த முறை மைத்திரிபால மொட்டு கட்சியில் மறைந்து பாராளுமன்றத்திற்குள் குதிக்க முயற்சிக்கிறார். அத்துடன் மைத்திரிபாலவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நாங்கள் மிகவும் அவதானத்துடன் இருக்கின்றோம்.

நல்லாட்சி தோற்கடிக்கப்பட்டு நாட்டில் அதிர்ஷ்டமாக கோத்தாபய வென்றார். முன்னைய ஜனாதிபதியிடம் 2700 ஊழியர்கள் இருந்தனர். தற்போதைய ஜனாதிபதி தனது ஊழியர்களை சுமார் 200 ஆக குறைத்தார். அத்துடன் வாகனங்கள் குறைக்கப்பட்டது

அத்துடன் ஜனாதிபதி ஆலோசனையில் படி கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க சுகாதார நடைமுறைகளைச் சரியான முறையில் கடைப்பிடித்தமையால் நாடு பாதுகாக்கப்பட்டது.
.
எதிர்காலத்தில் நாட்டை பாதுகாக்க இவ்வாறான ஒரு தலைவரே தேவை என்பதைக் கருதி நாங்கள் வாக்களிப்போம் 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »