இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்டு
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள அதன் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தனது பெயரை
ஹர்ஜன் அலெக்ஸாண்டர் என்று மாற்றிக் கொண்டு நடமாடுவதாக சர்வதேச பொலிஸார்
இலங்கையிடம் அறிவித்துள்ளனர்.
இந்த தகவலை சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா இன்று
நீதிமன்றத்தில் அறிவித்தார்.
அர்ஜுன் மகேந்திரன் தனது சொந்தப் பெயரை மாற்றியுள்ளமை
குறித்து அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியும் தெரிவித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.