கொழும்பில் உள்ள எனது வீட்டிற்கு சென்ற குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நான்
பயன்படுத்திய மடிக்கணிணியை நீதிமன்ற உத்தரவின்றி எடுத்துச் சென்றுள்ளதாக சண்டே
ஒப்சேவரின் முன்னாள் ஆசிரியர் தரிஷா பஸ்ரியன் தெரிவித்துள்ளார்.
தற்போது வெளிநாடொன்றில் வசித்துவரும் நிலையிலேயே அவரது மணிக்கணிணியை இவ்வாறு
எடுத்துச் சென்றுள்ளதாக தரிஷா பஸ்ரியன் அவரது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
குறித்த டுவிட்டர் பதிவுடன் அவர் ஒரு அறிக்கையொன்றையும் இணைத்துள்ளார்.
அதில், ஜூன் 9 ம் திகதி சி.ஐ.டி.யினர் எனது வீட்டை
சோதனையிடுவதற்கான அனுமதியுடன் சென்றுள்ளனர்.
எனது படுக்கை அறை, எனது மேசை
நான் பணிபுரிய பயன்படுத்தும் இடம் என அனைத்தையும் அவர்கள் சோதனையிட்டுள்ளனர்.
படங்களை எடுத்துள்ளனர்.
எனது கணிணியை கண்டுபிடித்த அவர்கள் அதனை எடுத்துச் சென்றுள்ளனர். எனது
மடிக்கணிணியை எடுத்தமைக்கான ஆவணத்தினையும் வழங்கியுள்ளனர். எனது வீட்டில் வசிப்பவர்களிடம் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.
நான் எந்த விசாரணை குறித்தும் பொருத்தமான அமைப்புடன் ஒத்துழைக்க தயராக
உள்ளேன்.
எனது மடிக்கணிணியை சிஐடியினர் ஆராய்ந்தாலும், என்மீது
குற்றச்சாட்டும் அளவிற்கு அவர்களிற்கு எதுவும் கிடைக்காது என நான் உறுதியாக
நம்புகின்றேன்.