உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளை விரைவில் நிறைவு செய்ய எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த விசாரணைகளுக்கு அமைய மேலும் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் 237 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்திருந்தார்.