உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தாக்தக்தின் அடுத்த மையமாக 1.3 பில்லியன் மக்கள் தொகையை கொண்டுள்ள ஆபிரிக்க கண்டம் மாறக் கூடும் என உலக சுகாதார நிறுவனம் அச்சம் வெளியிட்டுள்ளது.
ஆபிரிக்காவில் கடந்த வாரம் பதிவான கொரோனா தாக்கம் 43 வீதம் அதிகரித்துள்ளது.
கொரோனா தாக்கம் காரணமாக ஆபிரிக்காவில் இதுவரை 26,000ம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நோய் தடுப்புக்கான ஆபிரிக்க மையம் அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த வாரம் 16, 000 ஆக இருந்தது.
ஆபிரிக்காவில் இதுவரை 1,200 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளர்.