மக்கள் நலனுக்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் தப்லீக் ஜமாஅத் அமைப்பு எவ்வளவு உழைத்துள்ளது என்பதை வரலாறு மறைக்காது என நம்புவதாக அவ்வமைப்பின் தலைவர் மௌலானா சஅத் காந்தல்வி IANS செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய விசேட பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்திய தலை நகர் டெல்லியில் நடத்தப்பட்ட தப்லீக் ஜமாஅத் மாநாட்டின் மூலம் கொரோனா வைரஸ் பரவியதாக இந்திய அரசும் இந்திய ஊடகங்களும் தொடர்ந்தும் முஸ்லிம்கள் தொடர்பில் தவறான செய்திகளை பரப்பி வரும் நிலையில், தற்போது தலை மறைவாகியுள்ள தப்லீக் அமைப்பின் தலைவர் மௌலானா சஅத் காந்தல்வி முதன் முறையாக ஊடகத்திற்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மௌலானா சஅத் காந்தல்வி மீது தொற்று நோய் சட்டத்தின் கீழும் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழும் இந்திய அரசு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அவர் தற்போது தலை மறைவாகியுள்ளார்.
பொதுவாக இந்திய அரசு யார் மீதாவது குற்றம் சாட்ட முடிவெடுத்து விட்டால் சட்ட விரோத பணப் பரிமாற்றம் என்ற குற்றச்சாட்டை முன்வைப்பது வழக்கமாகும் ஏற்க்கனவே ஸாகிர் நாயக் மீதும் இதே குற்றச்சாட்டை இந்திய அரசு முன்வைத்துள்ளது. என அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுக்கின்றனர்.