வடகொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு செய்யப்பட்ட ஒரு அறுவை சிசிக்சையின் பின்னர் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாக அமெரிக்காவின் உளவுத் துறையின் தகவலை மேற்கோள் காட்டி CNN செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
அதிகமான புகைப்பிடிக்கும் பழக்கம், உடல் பருமன் அதிகரிப்பு மற்றும் வேலை காரணமான வடகொரிய அதிபர் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.