கடந்த வாரம் இம்றான்கானை சந்தித்த நன்கொடையாளர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்றான்கானுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக அவருடைய பிரத்தியேக வைத்தியர் பைசல் சுல்தான் தெரிவித்துள்ளார்.
மருத்துவ பரிசோதனைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் பரிசோதனை முடிந்ததும் அதனடிப்படையில் பரிந்துரைகள் முன்வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.